திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மருதாண்டங்குறிச்சி பகுதியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் விதவைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் வழங்கினார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நாள் முதல் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதாரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆணைக்கிணங்க அறம் மக்களை நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்டங்குறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி தவிக்கும் முதியவர்கள், மற்றும் விதவைகள் உள்ளிட்ட 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் மற்றும் பால்ராஜ், மக்கள் ராஜ்யம் பிஆர் ஒ கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களான மளிகை தொகுப்பையும், காய்கறி வாங்குவதற்கு 100ரூபாயும் பொது மக்களுக்கு வழங்கினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பா.முத்தழகன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாநிலதுணைச்செயலாளர் கா.அரசு, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பரமாவளவன், மருதாண்டக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பிரியா செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.