ஹஜ்ரத் திப்பு சுல்தான் ஜமாஅத் சார்பாக 1 லட்சம் மளிகை பொருட்கள் வழங்கினர்.
உலகம் முழுவதும் கொ ரோனாவினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் .எனவே பொது மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் வறுமையில் வாடுகின்றனர்.
பல்வேறு சமூகத்தைச் சார்ந்த அமைப்புகளும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு தங்களால் இயன்ற அளவு உணவு ,மளிகை பொருட்கள் , முககவசம், கிருமிநாசினி என பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை பி. கே. புதூர் ஹஜ்ரத் திப்பு சுல்தான் ஹனபி அஹ்லுஷ் சுன்னத் வல் ஜமாஅத் அரபி மதரஸா & ஜூம்ஆ மஸ்ஜித் சார்பாக மளிகை பொருட்கள் தொகுப்பு எழை ,எளிய மக்களுக்கு வழங்கபட்டது.
இந்த பொருட்களை ஜமாத் தலைவர் ஹாஜி.எஸ்.இக்பால் தலைமையில், குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் மக்களுக்கு வழங்கினார்.
இதில் ரூபாய் 800 மதிப்புள்ள அரிசி, பருப்பு,சக்கரை,தேயிலை பொடி, எண்ணெய்,கோதுமை மாவு,சேமியா,ரவை, சோப்பு ,சீரகம்,மிளகு,மஞ்சள் தூள் ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு சுமார் 100 பேருக்கு வழங்கினர்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் சமூதாய இடைவெளி விட்டு பொருட்களை பெற்று சென்றனர்.
இந்த நிகழ்வில் துணை தலைவர் நூர்தின், முத்தவல்லி ரஹ்மத்துல்லாஹ்,செயலாளர் சிராஜிதீன்,துணை செயலாளர் செய்யது அப்துல் சலாம், பொருளாளர் ரகமத்துல்லாஹ், மேனேஜர் குத்புதீன் உட்பட உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.