ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூா் ஒன்றியதிற்கு உட்பட்ட
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூா் ஒன்றியதிற்கு உட்பட்ட  கடத்தூா்,  ஆண்டிபாளையம்,  கூடக்கரை,சுண்டக்காம்பாளையம்  உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளில்   கோரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகாக தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கிருமி நாசினி தெளிப்பதை  தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் நோில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். தொடர்ந்து நம்பியூர் யூனியன் அலுவலகத்    தில் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 

 

கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிாியா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.70 கோடி  முதலமைச்சா் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அமைச்சா் தெரிவித்தார்.   ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடந்தால் ஆசிரியர்கள் பாதுகாப்பும் மாணவர்கள் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும் என கேட்டபோது,ஊரடங்கு உத்தரவின் போது மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி எனவும்,இந்த ஆண்டு தேர்வு எழுத தேவையில்லை என கூறினார். ஏப்ரல்14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் 15ஆம் தேதிக்கு பிறகு தமிழக முதலமைச்சர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்குத் தகுந்தாற்போல் செயல்படுத்தப்படும் என்று கூறினார். மாணவர்களும், ஆசிரியர்களும் அவரவர் இல்லங்களில் இருந்து பணியை தொடர்கின்றனர். பத்தாம் வகுப்புமாணவர்களுக்கு அரசு தொலைக்காட்சி மூலமாகவும்,யூடியூப் சேனல் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.முன்னதாக கூடக்கரை ஊராட்சியில் புளியம்பட்டி நச்சிகுட்டையில் இயங்கிவரும் சாணக்கியா இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனிடம் பள்ளியின் தாளாளர் உபேந்திரநாத் சிங் வழங்கினார்.அருகில் சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி. வேலுசாமி.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,நம்பியூர் ஒன்றியச் செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு,எலத்தூர் பேரூர் கழக செயலாளர் சேரன் சரவணன், கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image