திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மாநகர நல அலுவலர் டாக்டர்.பூபதி ஆகியோர் ஆலோசனையின் பேரில், தூய்மைப் பணியாளர்கள் 500 பேருக்கு கொரானா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட
கோவை மலுமிச்சம்பட்டி அச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தின் சித்தர் ஸ்ரீ சண்முக சிவ சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தூய்மை பணியாலர்களுக்கு கபசுரக்குடி நீர் வழங்கி பேசியதாவது:-
உலகப் பேரழிவு உருவாகவுள்ள தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள அனைத்து மக்களும் வீட்டில் உள்ளனர் நகரில் நோய் பரவாமல் இருக்கவும் மக்களுக்கு சுற்றுப்புறத்தை சுகாதாரத்தையும் பேணிக் காக்கும் தங்களின் எதையும் பயன்படுத்தாமல் நகரின் தூய்மைக்கு பாடுபட்டு வருகின்றனர் அப்படி உள்ளத்தூய்மை பணியாளர்களுக்கும் குடும்பத்திற்கும் உடலில் எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பின்னர் கடந்த மூன்று நாட்களாக லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது பணியாளர்கள் அவர்களின் குடும்பத்துக்கும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவருக்கு வழங்கப்பட்டு தற்போது திருப்பூரில் நோய் தொற்று வராமல் தடுப்பதற்காக ஒரு லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம்களிலும் காவல் நிலையம், செக்போஸ்ட்டுகளிலும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கமிஷனர் அலுவலகத்திலும் நில வேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் நாகஜோதி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி நிலைய பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் லோகநாதன், முருகன் திருப்பூர் சரவணன், ராஜ்குமார், தங்கதுரை, பாலாஜி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களகலந்துகொண்டனர்