முதுகுளத்தூர் : 
மக்கள் பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக முதுகுளத்தூர் ஒன்றியம் பொசுக்குடி, மீசல், செம்பொன்குடி, கீழத்தூவல், அலங்கானூர் உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி உ.சகாயம் இ.ஆ.ப அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
தனி மனித இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியை பின்பற்றி பயனாளிகளே பொருட்களை எடுத்துச் செல்லுமாறு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்கள் பாதை முதுகுளத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கண்ணன் , மக்கள் பாதை தன்னார்வலர்கள் மாரிமுத்து,விஜய் மற்றும் திருமுருகன், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.