திருச்சுழி அருகே தும்மு சின்னம் பட்டி, ஆர்.கல்லுமடம் ஊராட்சியில் ஊரடங்கினால் மக்கள் நடமாடும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தது இதை பயன்படுத்தி தும்மு சின்னம் பட்டி, ஆர்.கல்லுமடம், ஊராட்சியை தூய்மை படுத்தி கொரோனா வைரஸ் கிருமிகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகளையும், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வரைபடம் சாலைகளில் விளம்பரம் செய்ததையும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டதையும் மற்றும் வாறுகால் சுத்தம் செய்யப்பட்டதையும் திருச்சுழி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார் இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தும்மு சின்னம் பட்டிமுத்துமாரி ராமலிங்கம், ஆர்.கல்லு மடம் ராமலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி செயலர்கள்தும்மு சின்னம்பட்டி மேனகா, ஆர்.கல்லுமடம் இராமர் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சுழி அருகே தும்மு சின்னம் பட்டி, ஆர்.கல்லுமடம் ஊராட்சியில்