கமுதி ஒன்றியத்தில் 6660 குடும்பங்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு பையை மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ முனியசாமி வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியம் நாராயணபுரம் , பெரிய உடப்பங்குளம் , சேதுராஜபுரம் , அய்யன் கோவில்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 6660 குடும்பங்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு பையை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி வழங்கினார். உடன் மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் கமுதி ஒன்றிய கழக செயலாளர் காளிமுத்து உள்பட அதிமுகவினர் சமூக இடைவெளி கடைபிடித்து பொது மக்களுக்கு வழங்கினார்கள்.