திருச்சுழி அருகே மரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அரசு மருத்துவர் களுடன் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார் பின் பச்சேரியை சேர்ந்த முனியசாமி பாண்டி மீனா தம்பதியர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு "குழந்தைகள் நல பெட்டகம் " வழங்கி வாழ்த்தினார்
நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர் பொன்னுத் தம்பி, துணைத் தலைவர் மூக்கையன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதிதொல்காப்பியன், மண்டபசாலை ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார துறை ஆய்வாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்