கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நபர் ஒருவருக்கு 5000 வீதம் 50 குழுக்களுக்கு 2.50 லட்சம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மூலம் கொரோனா இடைக்கால கடன் திட்டத்தின் கீழ் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி துவக்கி வைத்தார்.இந்த கடன் தொகையானது ஆறு மாதங்களுக்கு பிறகு மாதம் ரூ175வீதம் செலுத்தினால் போதுமானது என தெரிவித்தார்.இது கோபியில் உள்ள நகராட்சிக்குட்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கி மூலம் ஏற்பாடு செய்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பொலவகாளிபாளைய ம், பொம்ம நாய்க்கன்பாளையம், சந்திராபுரம், கடுக்கம்பாளையம் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் தூய்மை பணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.மேலும் கோபிசெட்டிபாளையம் அனைத்து அரிசி ஆலைகள் சார்பாக மூன்று டன் அரிசி, 500முட்டைகள் போன்றவற்றை தூய்மை பணியாளர்கள், கூலி தொழிலார்கள், மாற்று திறனாளிகளுக்கு வழங்க அமைச்சரிடம் வழங்கினார்கள். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முத்துசாமி,நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்,குணசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கம் வெங்கடாச்சலம், பச்சியம்மாள் சண்முகத்தரசு,துணை தலைவர்கள் லட்சுமி காந்தன், ஈஸ்வரி, யூனியன் கவுன்சிலர்கள் இளங்கோ, துளசிமணி பாலுச்சாமி சொசைட்டி தலைவர்கள் சீனிவாசன்,பழனிசாமி,ஊராட்சி செயலாளர்கள் மணிகண்டன், சதீஸ்குமார்,வங்கி மேலாளர் சுமன்,சமுதாய அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, கோபி தாலுக்கா அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் ரத்தினசாமி, செயலாளர் சிகாமணி, பொருளாளர் ராம்குமார்,மாவட்ட நிர்வாகிகள் பழனிநாதன்,சந்திரசேகர்,கருப்புசாமி,கோபி தாலுக்கா அரிசி ஆலை செயல் அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நபர் ஒருவருக்கு 5000 வீதம் 50 குழுக்களுக்கு 2.50 லட்சம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மூலம்