திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 500கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் மக்கள் அரசர் டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ்குமார் ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்
கொரோனா தொற்றால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மக்கள் அரசர் டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோரின் ஆணைக்கிணங்க நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான பள்ளப்பட்டி, சூறாவளிப்பட்டி கிராமங்களிலுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான மக்கள் அரசர் டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ் குமார் ஆகியோர் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை நிதி உதவியுடன் வழங்கினர். இதில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் இளங்கோவன், பால்ராஜ், மாநில இணைச்செயலாளர் அறிவுமணி, மற்றும் அளுந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, அறம் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.