ஈரோடு கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.இதையடுத்து பல்வேறு தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் உள்ளிட்டோா் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.அதற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பி.சி.துரைசாமி, இயக்குநா் டி.சாந்தி ஆகியோா் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளனா்.
இயக்குநா்.D.சாந்தி