நெல்லை மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா சார்பில்
400 தூய்மைப் பணியாளர்களுக்கு
நலத்திட்ட உதவி
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வழங்கினார்
பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலம் பாராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிட நெல்லை மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா முடிவு செய்தார். இதனை அறிந்த பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, தானே நேரில் வந்து நிகழ்வில் கலந்து கொள்ளவதாக தெரிவித்து நெல்லை வந்தார். அவரை வரவேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, நெல்லை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 400 பேருக்கு, தலா 5 கிலோ அரிசி மற்றும் 15 வகையான காய்கனி கொண்ட தொகுப்பு "பையை" டிராபிக் ராமசாமியுடன் இணைந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.மாலைராஜா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன், டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி என்.எம்.ஆர். இசக்கி பாண்டியன், வியாபாரிகள் சங்கத் தலைவர் சத்யா பூ நாராயணன், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.