ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கமுதி ஒன்றியத்தில் 1500 ஏழை குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஏற்பாட்டில் கமுதி ஒன்றியம் ஒ.கரிசல்குளம் , நெறிஞ்சிபட்டி ,கோவிலாங்குளம், உள்பட பல்வேறு கிராமங்களில் 1500 ஏழை குடும்பங்களுக்கு காய் கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி வழங்கினார் . உடன்
கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர் .