சேலம்
144 தடை உத்தரவை முழுமையாக கடைபிடிப்பதாலும் துப்புரவு பணியாளர்களின் உழைப்பாலும் கொரோனா தொற்றில் இருந்து தப்பித்த உத்தரமசோழபுரம் கிராமம்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை நாளுக்குநாள் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூடும் பகுதிகள் மற்றும் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பின
ர் மனோன்மணி மற்றும் வீரபாண்டி ஒன்றிய பெருந்தலைவர் வரதராஜ் ஆணைக்கிணங்க உத்தமசோழபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் அருகே வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமசோழபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 144 தடை உத்தரவை முழுமையாக கடைப்பிடிப்பதாலும் துப்புரவு பணியாளர்களின் தன்னலமற்ற உழைப்பாலும் நோய் தொற்றிலிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் கூறுகையில் மக்களுக்காக நாங்கள் பணியாற்றுகிறோம் எங்களுக்காக அனைவரும் அரசின் உத்தரவை ஏற்று வீட்டினுள்ளேயே இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதாகவும் தெரிவித்தனர். மேலும் உத்தமசோழபுரம் பஞ்சாயத்து தலைவர் பெருமாள் கூறுகையில், தங்கள் கிராமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும் 144 தடை உத்தரவை மக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடிப்பதாலும், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் தன்னலமற்ற சேவையாலும் தங்கள் பகுதியில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அவர் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி யாரும் தூய்மைப் பணியில் ஈடுபட கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.