சேலம் சூரமங்கலத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் காலை உணவு வழங்கினர்...
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையில் வசிக்க வீடு இல்லாமல் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சேலம் மாநகர் மற்றும் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் சாலையோர ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கினர். சூரமங்கலம் பகுதி செயலாளர் தளபதி செல்வராஜ் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் 10 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சூரமங்கலம் பகுதியில் உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்த 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு மற்றும் குடிநீர் வழங்கினர்.