கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று ஒழிப்பு நிவாரணத்திற்காக நாடெங்கிலும் பல நிறுவனங்கள், மற்றும் அமைப்புகள் நிதியுதவியும் பொருள் உதவியும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பில், கொரோனோ நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி யிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் நல்லா.ஜி.பழனிசாமி கூறுகையில்...
கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 900த்திற்க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு நோய்எதிர்ப்பு முழு உடல் கவசம் மற்றும் ஆயிரத்து 200 லிட்டர் கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது. கொரோனோ நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.மேலும் கொரோனா சிகிச்சைக்காக தங்களின் கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் 128 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் பிரத்தியேகமாக சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது எனவும், இந்த சிறப்பு மருத்துவமனைக்கான நுழைவாயில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ளது என நல்லா.ஜி.பழனிசாமி தெரிவித்தார்