ராஜக்காபட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய கிராமப்பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு 
ஆண்டிபட்டி
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜக்காபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி, ராஜக்காபட்டி, காலனி ,சொக்கலிங்கபுரம் ,வேலப்பர் கோவில், கதிர்வேல்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதாஜெயக்குமார் அவர்கள் பொதுமக்கள் 3000 பேருக்கு கொரானா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் வழங்கினார் .இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணி, ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். முன்னதாக தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு தவறாமல் நிலவேம்பு கசாயம் வழங்கி கிராமப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் உப தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.