கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளையடுத்து நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் கடைகள்
அனைத்தும் மூடப்பட்டதால், சாலையோரம் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் என பலரும் உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அறம் மக்கள் -
நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா, பொதுச்செயலாளர் சு.ரமேஷ்குமார் இருவரும் ஒரு குழுவாக இணைந்து அப்பகுதிகளுக்கு சென்று மதிய உணவளித்தனர். மேலும் தமிழகம்
முழுவதிலும் உள்ள அறம் மக்கள் நலச்சங்கத்தினர் அவரவர்கள் பகுதிகளில் உள்ள சாலையோர ஏழை, எளியோருக்கு உணவளித்தனர்.
