நரிக்குடி மற்றும் வீர சோழன் கிராமசாலைகளில் தீயணைக்கும் வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிப்பு
கொரோனாடு வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது பல பகுதிகளில் விழிப்புணர்வு பணிகள் உள்ளிட்டவைகள் முழு வீச்சில் நடைபெற்றது இந்நிலையில் நரிக்குடி மற்றும் வீரசோழன் கிராமங்களில் ஊரடங்கினால் மக்கள் நடமாடும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தது. இதை பயன்படுத்தி நரிக்குடி மற்றும் வீர சோழன்ஊராட்சியை தூய்மை படுத்தி கொரோனா வைரஸ் கிருமிகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையை நரிக்குடி மற்றும் வீர சோழன் ஊராட்சியும், திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் இணைந்து தீயணைப்பு வாகனத்தில் 4500 ஆயிரம் தண்ணீரில் டெட்டால், லைசால், பினாயில், வேப்பெண்ணெய் ,மஞ்சள் பொடி பவுடர் ஆகியவற்றை மூன்று தடவையாக கலந்து 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் கலந்து வீர சோழன் ஊராட்சி உட் பட்ட ஒட்டங்குளம்கிராமம் உட்பட நரிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையம், யூனியன்அலுவலகம் மற்றும் நரிக்குடி - பார்த்திபனூர் சாலை உட்பட்ட சாலைகளில் கிரிமி நாசினியை தெளித்து சாலைகளை முழுமையாக தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இந்த வகையில் நகரின் அனைத்து தெருக்கள் சாலைகளில் முழுமையாக கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது இதில் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், மல்லிகா , நரிக்குடி ஊராட்சி தலைவர் முத்துமாரி காளிஸ்வரன், துணைத் தலைவர் ஜவஹர் வெங்கடேச பாண்டியன், மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலர் கவிதா,வீர சோழன் ஊராட்சி தலைவர் முகம்மது சாதிக்அலி, துணைத் தலைவர் செய்ய துமுகம்மது சேட், ஊராட்சி செயலர் ராஜசேகர பாண்டியன்,தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமுத்து, முன்னனி தீயணைப்போர் சந்திரசேகர், முனிஸ்வரன் மற்றும் நிலைய தீயணைப்போர் உட்பட பலர் கலந்து கொண்டனர்