தமிழக முதலமைச்சர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் நலனின் கருத்தில் கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள்
கீழ்கண்ட உத்தரவுகள்.29.3.2020 ஞாயிற்று கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது
1. கோயம்பேடு போன்ற மாநிலத்தின் மொத்த காய்கறி பல அங்கன்வாடிகளுக்கு மாநிலத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும்.
2. கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் மாலித்தில் உள்ள பிற காய்கறி விற்பனை கடைகள் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் திறந்து இருக்க வேண்டும்.
3. மருந்தகங்கள் உணவகங்கள் பார்சல் மட்டும் நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும்.
4. பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 30 மணி வரை மட்டுமே செயல்படும் எனினும் அரசு வாகனங்கள் 108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்தி களுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்குகள் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும்.
5. வயது முதிர்ந்தோர் வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர் சமைத்த உணவு பொருட்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர் நலன் கருதி SWiggy, Zomato, Uber eats , போன்ற நிறுவனங்கள் மூலம் காலை 7 மணி முதல் 9.30 வரை காலை சிற்றுண்டியும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 .30 மணி வரை மதிய உணவும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவும் எடுத்துச் சென்று சிறப்பினமாக அனுமதிக்கப்படுகிறது.
6. 15.02 .2020 க்கு பிறகு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள் தங்களை தானே கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் பொதுமக்களும் இந்நோய்ப் பரவலின் தீவரத்தை உணர்ந்து மாண்புமிகு தமழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்
என்று , வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் வெளியிட்டனர்
