புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பபேரில் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நகர் பகுதிகளான சார்லஸ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லைசால் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வில் அஇஅதிமுக நகர செயலாளர் க. பாஸ்கர், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழனி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், ரகுமான், உட்பட நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.