திருச்சுழி யில் கொரோனா குறித்த தாலுகா அளவிலான
ஆய்வுக் கூட்டம்*
திருச்சுழி யில் கொரோனா வைரஸ் குறித்து தாலுகா அளவிலான
ஆய்வுக் கூட்டம் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விருதுநகர் துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது இந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி, தாசில்தார் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி சசிதரன், பேசுகையில்
கொரோனா வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி பேசினார்.
அதே போல, கிராம மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகாரிகளும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
திருச்சுழி டிஎஸ்பி சசிதரன் பேசுகையில், அரசின் அறிவித்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே தேவையின்றி நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வட்டாட்சியர் கேட்டுக் கொண்டார். இதில் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி ,வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்
திருச்சுழி ஒன்றியக் குழு தலைவர் பொன்னுத்தம்பி, துணைத் தலைவர் முக்கையன், நரிக்குடி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் சந்தன பாண்டியன், நாகஜோதி கொல்காப்பியன்,தமிழ் பாடிஇராமலிங்கம், குமராயிசந்திரன், இந்து ராணி மாவட்ட கவுன்சிலர்கள் போஸ், பாரதிதாசன், திருச்சுழி முதல் நிலை ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணகுமார் உட்பட திருச்சுழி தாலுகா அலுவலர்கள் கலந்து கொண்டனர்
