சேலம்
மின்னாம்பள்ளி பஞ்சாயத்து சார்பில்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யாக
பொதுமக்கள் கைகழுவ கிருமிநாசினி-தண்ணீர் வசதி
சேலம்
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் ஆவரணம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ஊராட்சிக்குட்பட்ட செல்லியம்பாளையம் மின்னாம்பள்ளி பொன்மலை நகர் மற்றும் சிவலிங்கபுரம் திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மேலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பஸ் நிறுத்தம் மற்றும் சந்தை பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களின் நலன் கருதி பொது இடத்தில் கைகழுவ வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. சோப்பு மற்றும் கிருமினாசினியும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரும் இங்கு கையை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் ஆவரணம் கூறுகையில் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரமாக இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மற்றும் காய்ச்சல் சளி இருமலால் பாதிக்கப்பட்டவர்களுகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தற்போது தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி நோய்த் தொற்றில் இருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள் மூலம் பஞ்சாயத்து முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.