அருப்புக்கோட்டையில் செளடாம்பிகா கான்வென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில்,பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பியின் தொகுதி மேம்பாட்டு நிதி முலமாக இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த இலவசப் பொது மருதுவ முகாமிற்கு விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை நகராட்சிநகர் நல அலுவலர் இந்திரா வரவேற்றார். விருதுகர் மாவட்ட சுகாதாரப் 'பணிகள் துறை இணை இயக்குநர் பழனிச்சாமி, மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமைத் தொடக்கி வைத்த மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது உரையில், தாய்மார்கள் ஆண், பெண் சமம் என்பதை உணர்த்தி பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் ஆண், பெண் சமத்துவம் மேலோங்கித் தழைக்கும் என்றார். பின்னர் அவர்,முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கியதுடன், தாய்மார்களுக்கு தாய், சேய் நல பரிசுப் பெட்டகமும், நிறை மாத கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புப் பொருள்களும் வழங்கினார். பின்னர் அவர், முகாமில் நடைபெற்ற இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள். எய்ட்ஸ் நோய் பரிசோதனை, ஈசிஜி உள்ளிட்டவற்றையும், அவற்றுக்கு வழங்கப்பட்ட பல்வேறு மருத்துவச் சிகிச்சை முறைகளையும் பார்வையிட்டார். உடன் இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியத் தலைவர் கே.கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் மணி ,காங்கிரஸ் கட்சி மாநிலசிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், காங் கிரஸ் கட்சி,நகர 10வது வார்டு தலைவர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், மேலும் அருப்புக்கோட்டை வட்ட சுகாதாரத் துறை, மருதுவத் துறை அதிகாதிகள், ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும், பரிசோதனை, சிகிச்சைக்கு வந்த 500க்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர். பந்தல்குடி வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டியன் நன்றி கூறினார்.
அருப்புக்கோட்டையில் செளடாம்பிகா கான்வென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில்,பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பியின் தொகுதி மேம்பாட்டு நிதி முலமாக இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது