சேலம்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் முகக் கவசங்கள் இன்றி பணியில் ஈடுபடக் கூடாது என சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவு
சேலம்..

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் முகக் கவசங்கள் இன்றி பணியில் ஈடுபடக் கூடாது என சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவு..

 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் பணியாற்றும் 2000 தூய்மை பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசங்கள் மற்றும் கைகளுக்கான கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது...

 

தமிழக அரசின் 144 தடை உத்தரவை சேலம் மாநகரில் நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.முகக் கவசம் அணியாமல் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடக் கூடாது என சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்...

 

 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வழங்கினார். தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் பணியாளர்களுக்கு விளக்கினார். மேலும் சேலம் மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபடும் 2000 பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆணையாளர்  முகக் கவசங்கள் அணியாமல் பணியாளர்கள் யாரும் பணியில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்காக வாரம் ஒரு முறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தமிழக அரசின் 144 தடை உத்தரவை சேலம் மாநகரில் முற்றிலும் நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image