முதுகுளத்தூரில் 144 தடை விதி மீறல் மருந்துகடை 2 பலசரக்கு கடைகளுக்கு சீல் வைப்பு தாசில்தார் அதிரடி நடவடிக்கை
முதுகுளத்தூரில் 144 தடை விதிமீறலில் ஈடுபட்ட 1 மருந்து கடை 2 பலசரக்கு கடைகளுக்கு சீல் வைத்து தாசில்தார் முருகேசன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் .
முதுகுளத்தூர் தாசில்தார் முருகேசன் தலைமையில் டி.எஸ்.பி .ராஜேஸ் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் 144 தடை உத்தரவை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என ஆய்வு செய்தார்.
3 கடைக்கு சீல் வைப்பு:
முதுகுளத்தூர் பஜார் விதிமீறலில் ஈடுபட்ட மருந்து கடை மற்றும் 2 பலசரக்கு மொத்த விற்பனை ஸ்டோர் ஆகியவைகள் விதிமீறலில் ஈடுபட்டதால் 3 கடைகளுக்கும் சீல் வைத்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.