திருச்சுழி சாலைகளில் தீயணைக்கும் தண்ணீர் ஊர்தி மூலம் கிரிமி நாசினி தெளிப்பு
கொரோனாடு வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது பல பகுதிகளில் விழிப்புணர்வு பணிகள் உள்ளிட்டவைகள் முழு வீச்சில் நடைபெற்றது இந்நிலையில் திருச்சுழியல் ஊரடங்கினால் மக்கள் நடமாடும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தது. இதை பயன்படுத்தி திருச்சுழி ஊராட்சியை தூய்மை படுத்தி கொரோனா வைரஸ் கிருமிகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையை திருச்சுழி முதல் நிலை ஊராட்சியும், திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் இணைந்து தீயணைப்பு ஊர்தியில் 4500 ஆயிரம் தண்ணீரில் டெட்டால், லைசால், பினாயில், வேப்பெண்ணெய் ,மஞ்சள் பொடி பவுடர் ஆகியவற்றை மூன்று தடவையாக கலந்து 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் கலந்து திருமேனி நாதர் கோவில் தேரோட்ட வீதிகள், போலிஸ் ஸ்டேசன் பகுதி, காய்கறி மார்கெட், ரயில்வே பீட்டர் ரோடு, திருச்சுழி - நரிக்குடி சாலை மற்றும் குண்டாறு பாலம் வரை கிரிமி நாசினியை தெரித்து சாலைகளை முழுமையாக தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இந்த வகையில் நகரின் அனைத்து தெருக்கள் சாலைகளில் முழுமையாக கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது இதில் ஊராட்சி உதவி இயக்குனர் தணிக்கை உலகநாதன், வட்டார வளர்சி அலுவலர் திருநாவுக்கரசி, திருச்சுழி வட்ட மண்டல துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி, தாசில்தார் ரவிச்சந்திரன், திருச்சுழி முதல் நிலை ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணகுமார், ஊராட்சி செயலர் பிச்சை, தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமுத்து, முன்னனி தீயணைப்போர் சந்திரசேகர், முனிஸ்வரன் மற்றும் நிலைய தீயணைப்போர் உட்பட பலர் கலந்து கொண்டனர்