திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த தாலுகா அளவிலான
ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார் , திட்ட அலுவலர் சுரேஷ், மற்றும் துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்தின் அனைவரையும் வரவேற்றார்
சிறப்புரையாக பால் வளத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி கூறியதாவது
கொரோனா வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் , கிராம மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகாரிகளும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்றும்,
அரசுஅறிவித்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே தேவையின்றி நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் நிவாரண தொகை 1000 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் மளிகை சாமான்கள் பொது மக்களை ரேஷன் கடைகளுக்கு வரவிடாமல் அவரவர் வீடுகளுக்கே சென்று கொடுக்கும் வேண்டும் என்று கூறினார் கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், துணை ஆட்சியர் கிருஷ்ண வேணி, உதவி இயக்குனர் தணிக்கை உலகநாதன், காவல்துணை கண்காணிப்பாளர் சசிதர், இன்ஸ்பெக்டர் மூக்கன், வட்டார மருத்துவ அலுவலர்கள் திருச்சுழி செந்தில்குமார், நரிக்குடி ரெங்கசாமிவட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரிக்குடி பாலசுப்பிரமணியன், திருச்சுழி சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, திருச்சுழி கவுன்சிலர்கள் பூமயில் முத்துராமலிங்கம், முனியாண்டி, ராமலிங்கம், நரிக்குடி சேர்மன் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் திருச்சுழி முதல் நிலை ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணகுமார் துணைத் தலைவர் முத்துக்குமார் உட்பட தாலுகா அலுவலர்கள் கலந்து கொண்டனர்