சின்னக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முன்னாள் இராணுவ வீரர் பதவியேற்பு. மதுரையில் ஊரக, உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.இதில் சேடபட்டி சின்னக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் இராணுவ வீரர் ராமர் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு 2119மொத்த வாக்குகளில் 575வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான பதவியேற்பு விழாவில் அவருக்கு ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இவர் 1977ஆம் வருடம் இராணுவத்தில் சேர்ந்து 2005ம் வருடம் பணிபுரிந்தும்,நாயக்கா க பதவி வகித்து 24வருடம் நாட்டிற்காக சேவை செய்து பணி ஓய்வு பெற்றவர்.இவர் அஸ்ஸாம்,ராஜஸ்தான்,டெல்லி ஆகிய பகுதிகளில் பணி புரிந்தவர்.உடல் தகுதிக்கான தேர்வில் பி.டி விருது பெற்றவர்.இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும்,செல்லமுத்து என்ற மகனும்,செல்வி என்ற மகளும் உள்ளனர்.இவருடன் 1வது வார்டு செல்லதேவன்,2வது வார்டு லெட்சுமி,3வது வார்டு முத்தையா,4வது வார்டு அழகர்,5வது வார்டு திருமணி,6வது வார்டு செந்தில் ஆகியோர் உறுப்பினராக பதவியேற்று கொண்டனர்.
சின்னக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முன்னாள் இராணுவ வீரர் பதவியேற்பு