விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருமதி பஞ்சவர்ணம் குமார் வெற்றிபெற்றார்.
திருச்சுழி பஞ்சாயத்து தலைவராக திருமதி பஞ்சவர்ணம் குமார் அவர்களை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து அயராது பாடுபட்ட கிராம முக்கியஸ்தர்களுக்கு தொழிலதிபர் குமார் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.