திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தேர்தலில் R . உஷா ஜெயக்குமார் ஜேகே அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார் . ஜேகே என்பவர் முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களின் பேரன் ஆவார் .மொத்தம் 4521 வாக்குகள் பதிவாகின .இதில் 1519 வாக்குகள் அவர் பெற்றிருந்தார். 150 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றார். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அதிவிரைவில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். தண்ணீர் வசதி 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பைப்லைனை முதலில் மாற்றி சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். தரமான சாலை வசதி செய்து தரப்படும் .அரசு பொது மருத்துவமனையில் தரப்படுகின்ற மருந்துகளைப் போல் இங்கு மருத்துவர் வைத்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்படும் .இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும். நிரந்தரமான ஆம்புலன்ஸ் வசதி இங்கு ஏற்படுத்தப்படும் .வல்லூர் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு உடனே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மின்சாரத் துறையில் பேசி வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும். வேலைக்கு வெளியே செல்பவர்களுக்கு இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். நூலகத்தை பராமரித்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் டிஜிட்டல் முறையில் நூலகம் அமைத்து மாணவர்கள் பயன்படுத்த எண்ணற்ற தகவல்களை பெற செய்து கொடுக்கப்படும் .இந்த ஊராட்சியில் பல நல்ல மாற்றங்களை செய்து மாதிரி ஊராட்சியாக உருவாக்குவேன் எனக் கூறினார்
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தேர்தலில் R . உஷா ஜெயக்குமார் ஜேகே அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்