திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணித அறிவியல் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும்
எச்.ஐ.சி.எ.எ.எம்.எம்.சி.-2020 சர்வதேச கருத்தரங்க மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பூனே அப்பலாச்சியன் ஸ்டேட் யுனிவர்சிட்டி பேராசிரியர் மற்றும் இயக்குனர் எஸ்.சி.எம். டாக்டர். தினேஷ் எஸ்.தேவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கணித அறிவியல் துறை தலைவர் டாக்டர். மாரியப்பன் எழுதிய அப்ஸ்ராக்ட் எச்.ஐ.சி.எ.எ.எம்.எம்.சி.-2020 என்ற நூலை டாக்டர். தினேஷ் எஸ்.தேவ் வெளியிட மலேசியா டன் குசேன் ஆன் யுனிவர்சிட்டி கணித துறை பேராசிரியர் டாக்டர். கவின்குமார் ஜேக்கப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர். பால் தயாபரன், துறை தலைவர் டாக்டர். மாரியப்பன், லக்னோ ஐ.ஐ.எம். பேராசிரியர் டாக்டர். பாபா கிருஷ்ண மொகந்தி, ஜார்க்கண்ட் சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி டாக்டர். சுந்தர்ராஜன், மலேசியா சைமன் யுனிவர்சிட்டி பேராசிரியர் டாக்டர். சந்திரசேகரன் வீரய்யா, டாக்டர். இசாடின் இஸ்மாயில், டாக்டர். எம்.பி.தாக்கெர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.