போலீஸ் வாகனத்தில் ஏறி நின்று டிக்டாக் வீடியோ: 3 பேருக்கு நூதன தண்டனை - தூத்துக்குடி டிஎஸ்பி அதிரடி

போலீஸ் வாகனத்தில் ஏறி நின்று டிக்டாக் வீடியோ: 3 பேருக்கு நூதன தண்டனை - தூத்துக்குடி டிஎஸ்பி அதிரடி!!
      தூத்துக்குடி. ஜன.
      தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் வேலைக்காக நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் முன் டிக்டாக் செய்தவர்கள் மூன்று பேரை தென்பாகம் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் லெவிஞ்சிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த ராமர் மகன் சீனு (17), ஆனந்தன் மகன் கோகுலகிருஷ்ணன் (17), முனியசாமிபுரம் பலவேசம் மகன் செகுரா (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் செய்த தவறை உணர்ந்து, இனிமேல் இதுபோன்ற எந்த தவறும் செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர். 
        காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பது தெரியவேண்டும் என்பதற்காக அவர்கள் 3 பேரையும் காய்கனி மார்க்கெட் சிக்னலில் 8மணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணிசெய்து காவல்துறையை பெருமைப் படுத்தவேண்டும் என தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் நேற்று ஒருநாள் காலை முதல் மாலை வரை தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் முன்பு போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு காவல்துறை சார்பில் உணவும் வழங்கப்பட்டது


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image