அரசு பணியாளர் சங்கம் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் .
சேலம், ஜன 08-
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆதிசேஷையா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். நிரந்தரம் ஊதிய விகிதம் இல்லாத நியாய விலை கடை டாஸ்மார்க் ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு பணிநிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே. முருகேசன் பங்கேற்றார். மாநில பொது செயலாளர் ஜி. ஜெயச்சந்திர ராஜா பி பெரியசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர் இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் எண்ணற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.