நரிக்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் அம்மன்பட்டி மீ.இ.ரவிச்சந்திரன் அதிமுக சார்பில் 14வது வார்டு
யூனியன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை கூடத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் , கவுன்சிலராக அம்மன்பட்டி மீ.இ.ரவிச்சந்திரன் பதவியேற்றுக் கொண்டார்.அவருக்கு, நரிக்குடி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.