சேலம்
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்கு விற்பனை மற்றும் கண்காட்சி 
தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் கீழ் இயங்கும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் கைவினைப் பொருட்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதி நாடெங்கும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விளக்கு விற்பனை மற்றும் கண்காட்சி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியில் 6 அடி முதல் 12 அடி அளவிலான மலபார் விளக்குகள், தூண்டாமணி விளக்குகள், விநாயகர் விளக்குகள், தாமரை விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள் என 50க்கும் மேற்பட்ட விளக்குகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன தொடங்கிய இந்த கண்காட்சி வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் ஐந்து ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.