மகாகவி பாரதியார் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா



திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் மகாகவி பாராதியார் 137வது பிறந்ததின சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது.  திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்டம், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் தலைமை உரையாற்றினார்.

தேசியக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மாணிக்கம் சிறப்புரையில்,

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி  டிசம்பர் 11, 1882 பிறந்தார்.  கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்  என்றார். டிசைன் ஓவியப்பள்ளி அபிராமி வரைந்த ஓவியம் சிறப்பு அஞ்சல் உறையில் இடம் பெற்றது.

முன்னதாக அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் வரவேற்க,

ராக்போர்ட் அஞ்சல்தலை ஆராய்ச்சி மைய நிறுவனர் ஷர்மா நன்றியுரையாற்றினார். அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி , ஜம்புநாதன், லால்குடி விஜயகுமார் , ஹாபீஸ் மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார் , நாசர், தாமோதரன், ராஜேந்திரன், கமலகண்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image