ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளை சார்ந்த 2017-18-ல் பயின்ற 974 மாணவ-மாணவிகளுக்கு அம்மா அவர்களின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளை சார்ந்த 2017-18-ல் பயின்ற 974 மாணவ-மாணவிகளுக்கு அம்மா அவர்களின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 30-11-2019 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.  விழாவில் திங்களூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.டி.திம்மராயன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பெருந்துறை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் திரு.த.ராமன் அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு.என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு 2017-2018 கல்வி ஆண்டில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 175 மாணவர்கள், பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 172 மாணவிகள், விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 136 மாணவ மாணவிகள் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 134 மாணவ மாணவிகள் திங்களூர்அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 116 மாணவ மாணவிகள் சீனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 116 மாணவ மாணவிகள் துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 56 மாணவ மாணவிகள் இங்கு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 37 மாணவ மாணவிகள் நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 32 மாணவ மாணவிகள் ஆகமொத்தம் 974 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கி விழா பேருரை ஆற்றினார். மேலும் விழாவில் சென்னிமலை ஒன்றியத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். முடிவில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.நடராசு அவர்கள் நன்றியுரை வழங்கினார். உடன் வட்டாட்சியர் துரைசாமி, கருமாண்டிசெல்லிபாளையம் செயல் அலுவலர் கிருஷ்ணன், அவைத்தலைவர் சந்திரசேகரன், பெருந்துறை ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பெரியசாமி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் துளசிமணி, பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் கே.ஆர்.சின்னசாமி, அருணாச்சலம், சீதப்பன், கிருஷ்ணமூர்த்தி, மோகனசுந்தரம், துரைராஜ், ஏ.வி.பாலகிருஷ்ணன், கேபிள் துரை, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கோகிலார், நாகராஜ், பி.சுப்பிரமணியம், சண்முகம், தர்மராஜ், மணி, பழனிச்சாமி, சோடா தங்கவேல், சம்பத்குமார், வார்டு கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image