சேலம் மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு....
1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவானது இஸ்லாமியர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானது எனவும் இந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி சேலத்தில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஜாமியா மஸ்ஜித் தலைவர் அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத, எஸ்டிபிஐ, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இஸ்லாமியர்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு.