ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மவுன ஊர்வலம்
தூத்துக்குடி
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெருவில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு துவங்கிய மெளன அஞ்சலி ஊர்வலம் நகரின் முக்கிய வீதியின் வழியாக பழைய மாநகராட்சி அலுவலகத்தை வந்ததடைந்தது. பின்னர் அங்கே அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி தியாகராஜ் நட்டர்ஜி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ராஜசேகரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வீ.ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ஆறுமுகநயினார், ராஜ் நாராயணன், அதிமுக நிர்வாகிகள் அமிர்தகணேசன், ஏசாதுரை, ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மவுன ஊர்வலம்