மதுரையில் கிறிஸ்துமஸ் பெருவிழா 2019
மதுரை
பேராயர் அந்தோனி பாப்புசாமி வாழ்த்து.
மதுரை புதூர் பேராயர் இல்லத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் மற்றும் தமிழக ஆயர் பேரவை தலைவர் மேதகு அந்தோனி பாப்புச்சாமி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த போது:-
கிறிஸ்துமஸ் பெருவிழா என்றால் கிறிஸ்து பிறப்பு விழா. கிருஷ்ணஜெயந்தி,காந்திஜெயந்தி போல இது கிறிஸ்து ஜெயந்தி. நம்முடைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தருவது போல கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டமும்,நமக்கு மகிழ்ச்சி தருகிறது.இது மீட்பரின் பிறப்புவிழா.இது கடவுளின் பெயர் அன்பு,இரக்கம் என்று சொன்ன மீட்பரின் பிறப்புவிழா.சில எல்லைகள் நமக்கு வரையறுக்கப்படுகின்றன.சில எல்லைகளை நாமே வகுத்துக் கொள்கிறோம்.சில எல்லைகள் மற்றவர்களால் நம்மேல் திணிக்கப்படுகின்றன. இன்று நம் நாட்டில் சமயத்தில் பெயரில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு,அது குடியுரிமையின் பாதிப்பை ஏற்படுத்துவது ஆபத்தானது. உலகெங்கும் உள்ள நாடுகளில் பிரிவினை சுவர்கள் இடிக்கப்பட்டு கொண்டிருக்கும் வேலையில் நாம் இங்கே சமயத்தின் பெயரால்,மொழியின் பெயரால் உணவுப்பழக்கத்தின் பெயரால்,இனத்தின் பெயரால் சுவர்களை அதிகமாகிக் கொண்டே போவதால் சீக்கிரம் நாம் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் ஆகி விடுவோம் என்பதை மறந்துவிடக்கூடாது.சமயம் என்ற எல்லையைக் கடந்து கட்சி என்ற எல்லையை கடந்து,ஜாதி என்ற எல்லையை கடந்து மனிதம் என்ற ஒன்றை மையமாக வைத்து மனிதத்தையும்,மனித மாண்பையும் மனிதன் மதிப்பையும் சமத்துவத்தின் அடித்தளமாக கொண்டதால் இன்று ஒரே குடும்பமாக மகிழ்ந்து இருக்கின்றோம்.இறைவன் என்ற எல்லையை கடந்து,மனித வலுவின்மைக்கும் பாதுகாப்பின்மைக்கும் தம்மையே உட்படுத்தி நமக்கு நலம் தர விளைந்த கிறிஸ்து பெருமான் நம்முடைய எல்லைகளை நாம் தாண்ட ஒரு முன்மாதிரி. அவரின் பாதச் சுவடுகளில் நாம் பயணம் செய்தால் கொண்டாட்டம் இனிய அனுபவமாக மாறும் எனவும்,தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது.அதிமுக அணியில் மதவாத கட்சிகள் இணைந்துள்ளன.திமுக கூட்டணியில் காங்கிரஸ்,பொதுவுடமைக் கட்சிகள்,விடுதலை சிறுத்தைகள்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,முஸ்லிம் அமைப்புகள் ஒன்றாய் நிற்கின்றன.நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பின்பற்றிய நிலைப்பாடு உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.கட்சி அடிப்படையில் நடைபெறும் ஊராட்சி,ஒன்றிய உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தலில் மதவாதக் கட்சிகளையோ, மதவாதக் கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியையோ நாம் ஆதரிக்கவில்லை. மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் அடிமட்ட கிராமங்கள் வரை வேர்விட வழிகோலும்.எனவே மதச்சார்பற்ற கட்சிகளும் கூட்டணி களையும் ஆதரிக்கிறோம் என பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பிரிட்டோ ஆகியோர் உடன் இருந்தனர்.