தமாகா நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம். விருதுநகர் வடக்கு மாவட்டத் தலைவர் ராஜபாண்டியனிடம் விருப்ப மனுக்களை வழங்கினர்.
தமாகா நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம். 

 

விருதுநகர் வடக்கு மாவட்டத் தலைவர் ராஜபாண்டியனிடம் விருப்ப மனுக்களை  வழங்கினர்.

 

விருதுநகர் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட விருப்பம் தெரிவித்து மாவட்ட தலைவர் ராஜபாண்டியனிடம் விருப்ப மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மேலிடப் பார்வையாளர்கள் ஐ.சிலுவை, இரா.மணி ,மாநில செயலாளர் க.பாலசுப்பிரமணியம் உட்பட கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜிகே வாசன் அறிவித்தபடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ரூபாய் இரண்டாயிரமும் ,ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு ரூபாய்.ஆயிரமும்  விண்ணப்பக் கட்டணமாக பெறப்பட்டது. இதில் ,ஆதிதிராவிடர் மற்றும் மகளிர்களுக்கு 50 சதவீத கட்டணம் வசூலிக்குப்படுவதாக  மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் கூறினார்.மேலும்,கூறுகையில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா இடம் பெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சியை ஏற்படுத்த ,தமாகா நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றி அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.உள்ளாட்சித்தேர்தலில் ,  எந்தெந்த பதவிக்கான இடங்களில் போட்டியிடுவது என்பதை கூட்டணி நிர்வாகிகளிடம் கலந்து பேசி தமாகா அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பினை பெறுவோம்  என்றும் மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image