சேலம் அமைச்சூர் ஆர்ட்ஸ், தமிழ்நாடு பிராமணர் சங்கம், சந்திரசேகர கமலம் பவுண்டேஷன் சார்பில், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற
5 கலைஞர்களுக்கு, சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
விருது பெற்ற கலைஞர்களை ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கி கவுரவித்தார். கே.கே.ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். ராசிசரவணன் தலைமை உரையாற்றினார். தாரை குமரவேல், ஸ்ரீராமன், ரமணி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள் அமைச்சர் செம்மலை எம்.எல்.ஏ., கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். கலைமாமணி விருது பெற்ற குரலிசை கலைஞர் மகாராஜபுரம் ராமச்சந்திரன், எழுத்தாளர்கள் கு.கணேசன், நாட்டியக் கலைஞர் பாண்டியன், புல்லாங்குழல்
கலைஞர் ரவிச்சந்திரமோகன், மிருதங்க வித்வான் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், சேலம் வித்யாவாணி வித்யாலயா மாணவர்களின் குரலிசை பாட்டும், கலைஇளமணி கிருத்திகா சரவணன் நாட்டிய நிகழ்ச்சியும், கலைமாமணி ராமச்சந்திரன் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரசு இசைப் பள்ளி முதல்வர் சங்கரராமன் விழாவினை ஒருங்கிணைத்து வழங்கினார்.