சேலம் பூலாவரியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவுநாளையொட்டி திமுகவினர்
அமைதி ஊர்வலமாக சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகத்தின் 7ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பூலாவரியில், சேலம் கிழக்கு மாவட்ட
திமுக சார்பில் நினைவு நாள் அமைதி ஊர்வலத்தை திமுகவினர் நடத்
தினர், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் பூலாவரி ஊராட்சி கிளை அலுவலகம் முன் கட்சியினர் திரண்டனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள்
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரது படத்திற்கு வீரபாண்டி
ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை
செலுத்தினர் பின்னர், கிளை அலுவலக பகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்திற்கு திமுகவினர் அமைதி
ஊர்வலமாக சென்றனர். அங்கு, வீரபாண்டி ராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர்
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வீரபாண்டி பிரபு, முன்னாள்
எம்.பி கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் கோபால், குணசேகரன், தமிழ்செல்வன், சின்னதுரை மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.