உள்ளாட்சி தேர்தலில் பாமக வெற்றியடைய கிளைவாரியாக கட்சியை பலப்படுத்த நிர்வாகிகளை நியமணம் செய்து பணியாற்ற இருப்பதாக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாநகர மாவட்ட பாமக கட்சியின்
நடைபெற்றது . பாமகவின் தலைமைக்கழக மாநில துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாநகர மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தி வெற்றிபெற கிளைவாரியாக அமைப்பை வலுப்படுத்துவது எனவும் , நெகிழி இல்லா பயண்பாட்டை அரசு முழுவதுமாக கண்காணிக்க வேண்டும் , நொய்யலாற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல்கவுண்டர் ,மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் மன்சூர் , மாவட்ட செயலாளர்கள் அசோக்ராஜ் , பிரதீப்குமார் மற்றும் மணிக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.