கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் இந்து அமைப்பினர் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சார்பில் சிறப்பு அபிஷேகேம், பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 1963 ஆம் ஆண்டு இறந்த போது வள்ளநாட்டு சித்தர் தேவரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்தார். இதனை முன்னிட்டு ஒவ்ùôரு ஆண்டும் தேவர் இறந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆண்மீக துறவிகள் பசும்பொன்னுக்கு வந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து வருகின்றனர். நிகழாண்டில் அகில இந்திய துறவியர் பேரவை தலைவர் ராமனந்தா மகரிஷி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் முத்துராமலிங்கத்தேவருக்கு பால், எண்ணை, திருநீறு, பஞ்சாமிர்தம், நெய், உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் தாமிரபரணி முதல் கங்கை வரை உள்ள புன்னிய நதிகளின் தீர்தங்கள் மூலமாக அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் புறநானூறு பாடல்கள், முருக கடவுளின் கீர்த்தனைகளை பாடி இந்து சாஸ்திர ஆகம விதிகளின் படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறவிகள் மட்டுமின்றி பா.ஜ.க வணிக பிரிவு மாநில துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, ராமநாதபுரம் ஞான தீப சேவா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், சாரதா சேவா சமீதி சங்கம் கஸ்தூரிபாய், விஜயராணி, குபேந்திரா கேசவன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பால்ராஜ், ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் மயில்மணிபாண்டியன், மாநில பூசாரிகள் சங்கத் தலைவர் முனியப்பகுமார், மாநில வர்த்தக அணி துணை தலைவர் முருகன்ஜி, இளைஞரணி செயலாளர் ஜெகதீசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தர்மராஜ், இந்து முன்னனி பரமக்குடி பொறுப்பாளர் திருமுருகன், மதுரை வடடக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள், மதுரை தேவர் பேரவை , மதுரை முக்குலோத்தோர் வளர்ச்சி இயக்கம், அனைத்து மறவர் கூட்டமைப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில்