தமிழ் மாநில காங்கிரஸ் விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர்கள் அரசன் கார்த்திக் ,ராஜபாண்டியன் தலைமையில் விருது நகரில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஐஎன்டியூசி பாலசுப்ரமணியன் , சிறப்பு அழைப்பாளர்கள் சிலுவை மற்றும் மணி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.