திருப்பூர் காந்திநகர் ஏவிபி பள்ளியில் உலக விளையாட்டுக்கான பாதை என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகளுக்கான கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது
உலக விளையாட்டுக்கான பாதை என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகளிலும் கால்பந்து கைப்பந்து கூடைப்பந்து கைப்பந்து ரக்பி ஏழு நபர் ஆகிய ஐந்து விளையாட்டு போட்டிகளுக்கான கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உலகின் சிறந்த கால்பந்து வீரர் பாரிஸ் உலக விளையாட்டின் தலைவரும் பிரான்ஸ் நாட்டு கால்பந்து பெடரேஷன் தொழில்நுட்ப இயக்குனருமான கிறிஸ்தோப கிலார்ட் டீபிளே மற்றும் பாரிஸ் உலக விளையாட்டின் இயக்குனரும் உலகின் தலைசிறந்த பிரான்ஸ் நாட்டின் கிளப் அணியான பிஎஸ்ஜி தொழில்நுட்ப இயக்குனரும் ஆன லோரண்ட் பிடிடா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஏவிபி பள்ளி மாணவ மாணவியருக்கு ஆடுகளத்தில் கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்கள் மற்றும் விதிமுறைகள் எளிதாக எதிரணியினரை கையாளக்கூடிய தந்திரங்கள் ஆகியவற்றை மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் கோவை ஈரோடு நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளியை சேர்ந்த பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள் என 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயிற்சியாளர்களுக்கு தங்களுக்குள்ள சந்தேகங்களை எடுத்துக்கூறி தெளிவான விளக்கத்தினை பிரான்ஸ் நாட்டு வல்லுனர்கள் இடமிருந்து பெற்றனர் இந்நிகழ்ச்சி முடிவில் ரோட்டரி மெட்டல் டவுன் செயலாளர் சிவசந்திரன் நன்றி தெரிவித்தார் மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காந்திநகர் ஏவிபி பள்ளி முதல்வர் தனலட்சுமி ஏற்பாடு செய்திருந்தனர்