திருச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி வருகைதந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இ.முஹம்மது முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தபோது கூறுகையில்... பார்மசூதி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அறிவித்த 5ஏக்கர் நிலம் முஸ்லீம்களுக்கு தேவையில்லை, இந்தியநாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதுபோன்ற நீதிகளை வழங்கவேண்டாம் என்று முன்னாள் நீதியரசர்கள் கூறியுள்ளநிலையில், இஸ்லாமியர்கள் பலரும் இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை விளக்கும்வகையில் தீர்ப்புக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை ஐஐடி கல்விநிறுவனம் மர்மதேசமாக செயல்பட்டு, ஒருகுறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு சமூகத்தினர், ஜாதியினர் கல்விபயிலக்கூடாது என்ற எண்ணம்கொண்டவர்கள் பேராசிரியர்கள் உள்ளனர், பாத்திமா மட்டுமன்றி முன்னர் நிகழ்ந்த தற்கொலைக்கும் இதுவே காரணம், எனவே கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலையை மத்திய, மாநில அரசு ஏற்படுத்தவேண்டும். பல்வேறு போராட்டங்கள் இதுதொடர்பாக நடைபெற்று, முதல்வர் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டது, இருப்பினும் இதுகிடப்பில் போடப்பட்டால் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சிக்க ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் உரிமை உள்ளது, இத்தீர்ப்பை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைப்புகள் இதனை ஏற்கவில்லை, லெட்டர்பேட் கட்சிகள், அமைப்புகள் மட்டுமே சிலரை திருப்திபடுத்த இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். காஷ்மீர், முத்தலாக் உள்ளிட்ட பலபிரச்சனைகளில் எதிர்ப்பு இல்லையென்பதை ஏற்கமுடியாது, தற்போதைய சூழலில் முஸ்லீம்கள் மட்டுமன்றி பாஜகவின் எதி;ர்கட்சிகள்மீதும் அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. சபரிமலை விஷயத்தில் அவர்கள் மதநம்பிக்கையில் தலையிட்டு கருத்துகூறமுடியாது, பெண்களுக்கு சமஉரிமை என்று பேசிவரும் பாஜகவினர், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் மதத்தை வைத்துக்கொண்டு பாஜக அரசியல் செய்துவருகிறது