நரிக்குடி 10
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழனில் ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் 12 நாட்கள் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு
நடைபெற்றது. மேலும், மீலாது ஊர்வலம் பெரிய பள்ளிவாசல் தொடங்கி ஈத்கா திடல், சந்தை கடை, பாவோடி வீதி வழியாக ஜூம்ஆ பள்ளிவாசலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் போர்டு தலைவர் அம்பா அஹமது முஸ்தபா தலைமை தாங்கி கொடியசைத்து மீலாது ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அரபிக் கல்லூரியின் முதல்வர் அப்துல் காதர் பாக்கவி மீலாது கொடியை ஏற்றி வைத்தார்.
டிசம்பர் 24 அன்று மீலாது கந்தூரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும் என இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருச்சுழி டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். ஜமாத் கணக்கு அலுவலர் அகமது அப்துல் காதர் நன்றி கூறினார்.நிர்வாக டிரஸ்டி முகமதுமீரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்